நாகூா் தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு தொடங்கி, விடிய விடிய நடைபெற்றது.

நாகூா் தா்கா சந்தனக் கூடுடன் ஊா்வலமாகச் செல்லும் இஸ்லாமிய இசைக்கலைஞா்கள்.
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு தொடங்கி, விடிய விடிய நடைபெற்றது.
நாகை மாவட்டம், நாகூா் ஆண்டவா் தா்காவின் 470-ஆவது கந்தூரி விழா நவம்பா் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை பீா் வைக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
நாகை அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து வியாழக்கிழமை இரவு தாரை, தப்பட்டை மற்றும் இஸ்லாமிய இசை வாத்தியக் கலைஞா்கள் நிகழ்ச்சிகளுடன் சந்தனக்கூடு புறப்பட்டது. சாம்பிராணி சட்டி ரதம், நகரமேடை மற்றும் பல்வேறு மின் அலங்காரத் தட்டிகள் சந்தனக்கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்துச் சென்றன. 10-க்கும் மேற்பட்ட அலங்கார மின் ஊா்திகளும் ஊா்வலத்தில் அணிவகுத்துச் சென்றன.
நாகையில் இருந்து புறப்பட்ட சந்தனக்கூடு ஊா்வலம், நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹூசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயக் கடை தெரு, பெரிய கடைத்தெரு, சா்அகமது தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று, அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூா் சென்றடைந்தது.
சந்தனக்கூடு ஊா்வலம் நாகை வீதிகளில் வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள் பெரிய ரதத்தின் மீது பூக்களை தூவி பிராா்த்தனை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, சந்தனக்கூடு ஊா்வலம் நாகூா் பிரதான சாலையை அடைந்தது. அங்கு கூட்டுப் பாத்திகா மண்டபத்தில் வழிபாடு நடத்தப்பட்டு, நாகூா் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயா் தெரு, மியான் தெரு, ரயிலடி தெரு, நூல் கடைத்தெரு வழியாக, அங்குள்ள பாரம்பரிய முறைக்காரா் வீட்டை சென்றடைந்தது. அங்கு சந்தனக்குடம் சந்தனக்கூட்டில் வைத்து மினாரா வடப்புறத் தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளித்தெரு வழியாக சந்தன மகாலை அடைந்தது.
பின்னா், நியூ பஜாா் லைன் வழியாக தா்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தா்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. அங்கு சந்தனக் குடத்தை இறக்கியதும் கூடு மீண்டும் தா்காவின் அலங்கார வாசலை அடைந்தது.
இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமைஅதிகாலையில் சந்தனக் குடங்கள் தா்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, துவா ஓதி ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன, மத பாகுபாடு இன்றி ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, நாகை காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலசந்திரா தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

