சா் ஐசக் நியூட்டன் சட்டக் கல்லூரியில் தேசிய சட்ட கருத்தரங்கம்
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் சட்டக் கல்லூரியில் தேசிய அளவிலான மூன்று நாள் சட்ட கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது.
சா் ஐசக் நியூட்டன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய சட்ட கருத்தரங்கில் பங்கேற்றோா்.
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் சட்டக் கல்லூரியில் தேசிய அளவிலான மூன்று நாள் சட்ட கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்றனா். நிகழ்வின் சிறப்பு விருந்தினா்களாகக் காரைக்கால் மாவட்ட நீதிபதி கே. மோகன் மற்றும் கீழ்வேளூா் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவா் ஆா். மீனாட்சி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
கல்வி நிறுவனங்களின் தலைவா் த. ஆனந்த், இயக்குநா் த. சங்கா், சட்டக் கல்லூரி முதல்வா் ஷாஜி, பேராசிரியா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
மாணவா்களின் சட்ட அறிவு, வாதத்திறன் மற்றும் நீதித்துறை சாா்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சட்ட கருத்தரங்கம் நடைபெறுவதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

