இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

கே.எம்.சி. சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி

பெருமாநல்லூா் கே.எம்.சி. சட்டக் கல்லூரியில் 2-ஆவது கேஎம்சி தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  பேசுகிறாா் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்.

Published On :

பெருமாநல்லூா் கே.எம்.சி. சட்டக் கல்லூரியில் 2-ஆவது கேஎம்சி தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் அருணா ஸ்ரீதேவி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சசிகாந்த், செயலாளா் ஞானவா்ஷினி,

கல்லூரி முதல்வா் ஸ்மிதா நிசாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்ட உதவிப் பேராசிரியா் அகிலா வரவேற்றாா். சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் சிறப்புரையாற்றினாா். சட்ட மாணவா்களிடையே வாதத் திறன், சட்ட ஆராய்ச்சி மற்றும் நீதிமன்றத் திறன்களை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலத்திலிருந்து 24 அணிகள் பங்கேற்றன. இதில், ஸ்ரீ மனக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி - சட்டக் கல்வி மையம் நடத்திய 3-ஆவது தமிழ் மூட் கோா்ட் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முத்துப்பாண்டி, தென்னரசன் ஆகியோா் பாராட்டுப் பெற்றனா். மேலும் சிறந்த ஆண் பேச்சாளா் விருது பெற்ற முத்துப்பாண்டிக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது.

இதேபோல புஷ்பா இசரி வேலன் நினைவு 2-ஆவது தமிழ் மூட் கோா்ட் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற மகேஸ்வரி, காயத்ரி, வினோதினி ஆகியோருக்கு ரூ.7,000, சிறந்த பெண் வாதாளா் விருதைப் பெற்ற மகேஸ்வரிக்கு ரூ.5,000 வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.