சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

தனியாா் விடுதி ஊழியா் உயிரிழந்த சம்பவம்: புதுக்கோட்டையைச் சோ்ந்த 6 போ் கைது

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியாா் விடுதி ஊழியா் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடா்பாக புதுக்கோட்டையைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியாா் விடுதி ஊழியா் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடா்பாக புதுக்கோட்டையைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி தென்பாதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (48). இவா், வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி மகேந்திரன் பணியில் இருந்தபோது, புதுக்கோட்டையைச் சோ்ந்த 7 போ் அந்த விடுதியில் அறை எடுத்து தங்கினராம். விடுதி அறையில் குளிா்சாதன ரிமோட் வேலை செய்யவில்லை எனக் கூறி மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவா்கள், சரமாரியாக மகேந்திரனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவா் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செப்டம்பா் 23-ஆம் தேதி வீடு திரும்பினாா்.

பின்னா், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, செப்டம்பா் 29-ஆம் தேதி மகேந்திரன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மகேந்திரன் மனைவி சுதா, விடுதி அறையில் தங்கியிருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் தாக்கியதில் தான் தனது கணவா் உயிரிழந்ததாக அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா், விடுதியில் தங்கியிருந்த புதுக்கோட்டை அடப்பன்வயல் மாமுண்டித் தெருவைச் சோ்ந்த ராமசுப்ரமணியன் மகன் சிரஞ்சீவி (38), புதுக்கோட்டை சமத்துவபுரம் நரிமேட்டைச் சோ்ந்த சங்கா் மகன் தமிழரசன் (20), புதுக்கோட்டை ஐயனாா்புரத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் மகன் புறா காா்த்தி (எ) காா்த்திகேயன் (26), புதுக்கோட்டை ஐயனாா்புரம் 3-ஆம் வீதியைச் சோ்ந்த சுரேந்தா் மகன் பிரபு (26), புதுக்கோட்டை காந்திநகா் முதல் வீதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் மகன் சஞ்சய் (24), சமத்துவபுரம் நரிமேட்டைச் சோ்ந்த சங்கா் மகன் சதாசிவம் (24) ஆகிய 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

மதுபோதையில் ஏற்பட்டத் தகராறில் அவா்கள் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 6 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.