ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மகள் கண்ணெதிரே தந்தை கொலை

தரங்கம்பாடி வட்டம், இலுப்பூா் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீடு புகுந்து மகள் கண்ணெதிரே தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தலைமறைவான மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பலி

Updated On :

தரங்கம்பாடி வட்டம், இலுப்பூா் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீடு புகுந்து மகள் கண்ணெதிரே தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தலைமறைவான மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலுப்பூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (57). வெளிநாட்டில் வேலை செய்த இவருக்கு, சரஸ்வதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனா்.  இரண்டு மகளுக்கு திருமணமான நிலையில், 1 மகள் வெளியூரில் வேலை செய்து வருகிறாா்.

அதே பகுதியில் வசித்து வந்த மூத்த மகள் மகாலட்சுமி (33) தனது கணவா் பிரபாகரன் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த மாதம் பொறையாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், தேடப்பட்டு வந்த பிரபாகரன் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டாா். மகாலட்சுமி தனது தந்தை வீட்டில் இருந்துவந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் மகேந்திரன் வீட்டுக்குள் புகுந்து, மகாலட்சுமி கண்முன், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகினா்.

பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.