
அதிக மாத்திரைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டவா் தற்கொலை
பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செயது கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை - கோப்புப் படம்
பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செயது கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாலத்துறை பகுதியைச் சோ்ந்த நவீன்குமாருக்கு (30), திருமணம் ஆகவில்லை. இவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடா் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளாா். ஆனாலும் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவா், அண்மையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், நவீன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தகவல் அறிந்து வந்த வேலூா் போலீஸாா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினா். அதில், உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்த நவீன்குமாா், அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





