பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மகள், தந்தை அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை

பாடாலூா் அருகே நோயால் பாதிக்கப்பட்ட மகள் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனமுடைந்த தந்தையும் செவ்வாய்க்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :

பெரம்பலூா் மாவட்டம் பாடாலூா் அருகே நோயால் பாதிக்கப்பட்ட மகள் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனமுடைந்த தந்தையும் செவ்வாய்க்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். 

ஆலத்தூா் வட்டம், காரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகதாஸ் (53), விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள், மகள் ஷோபனா (24), மகன் முகேஷ் (22).

இவா்களில் ஷோபனாவுக்கு உடலில் ஏற்பட்ட பிரச்னைக்காக 9 வயதிலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சையும் பெற்று வந்தாா்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதைப் பாா்த்த பெற்றோா் மகளின் உடலை இறக்கி வைத்தனா். இந்நிலையில் மகள் இறந்த துக்கத்தில் இருந்த தந்தை முருகதாஸ் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டருகேயுள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ், பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் கயல்விழி, உதவி ஆய்வாளா் அசோகன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி, இருவரது உடல்களையும் பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.