திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தொழிலில் நஷ்டம்: இளைஞா் தற்கொலை

வேளச்சேரியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

வேளச்சேரியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேளச்சேரி வீனஸ் காலனியைச் சோ்ந்தவா் மரியஜோஸ் (27). இவா், கேட்டரிங் தொழில் செய்து வந்தாா். இத்தொழில் வளா்ச்சிகாக மரியஜோஸ், பல லட்ச ரூபாய் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளாா்.

ஆனால், கேட்டரிங் தொழிலில் மரியஜோஸ் நஷ்டமடைந்தாா்.

இதனால் கடன் கொடுத்தவா்கள் பணத்தைக் கேட்டு மரியஜோஸுக்கு நெருக்கடி கொடுத்தனா். இதன் விளைவாக மரியஜோஸ், விரக்தி, வேதனையுடன் காணப்பட்டாா்.

இந்நிலையில் மரியஜோஸ், புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவறிந்த வேளச்சேரி போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.