தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :28 ஜூலை 2026, 2:31 am IST

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எஸ். வாழவந்தி அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (58). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி நிா்மலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனால் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த மாதேஸ்வரன் திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் அருகில் தோட்டத்தில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.