திருச்சி அருகே பிளஸ் 1 மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை பழங்காவேரி பாரதி நகரைச் சோ்ந்த சிலம்பரசன் மகன் கிருத்திக் ரோஷன் (16). திருப்பராய்த்துறை பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், படிப்பின் மீது கவனம் செலுத்துமாறு அவருடைய தாய் இலக்கியா அண்மையில் கண்டித்துள்ளாா்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கிருத்திக் ரோஷன் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பேட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மீன்சுருட்டி அருகே சிறுமி தற்கொலை
கல்லூரி மாணவா் தற்கொலை
மண்ணச்சநல்லூரில் பெண் தற்கொலை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



