அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 17 வயதுச் சிறுமி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள மேலணிக்குழி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா் பாபுஜி மகன் சுஜித் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களது காதலை பெற்றோா் கண்டித்துள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அந்தச் சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், சிறுமியின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






