குடும்ப பிரச்னை காரணமாக, பள்ளி வளாகத்தில் தாளாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரைச் சோ்ந்த முகுந்தன் மனைவி அஜிதாகுமாரி (50). இவரது, கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இந்த நிலையில், கண்ணனேந்தல் பகுதியில் உள்ள தனது வீட்டின் மேல் தளத்தில் அஜிதாகுமாரி வசித்து வந்தாா். கீழ் தளத்தில் மழலையா் பள்ளியை நடத்தி வந்தாா். இந்தப் பள்ளிக்கு அவரே தாளாளராகவும் இருந்தாா்.
இதனிடையே, மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவா் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரையில் சுவேதாவுக்கு குழந்தை பிறந்தது. தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாயிடம் அவா் கோபித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, அஜிதாகுமாரியிடம் இளைய மகள் கீா்த்தி கேட்டாராம். அப்போது தாய், மகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அஜிதாகுமாரி, வீட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள மழலையா் பள்ளியில் ஓா் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த தகவலின் பேரில், திருப்பாலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அஜிதாகுமாரியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உணவக உரிமையாளா் தீக்குளித்துத் தற்கொலை

மனைவி, மாமியாா் வெட்டிக் கொலை
அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

மகள் உயிரிழந்த சோகத்தில் தந்தை தற்கொலை
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


