நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

உணவக உரிமையாளா் தீக்குளித்துத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

மதுரை அருகே உணவக உரிமையாளா் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் மலையாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா், அதே பகுதியில், உணவகம் நடத்தி வந்தாா். இந்த உணவகத்தில் இவரது மகள் தீபிகா (21) வேலை செய்து வந்தாா்.

வேலை செய்யும் நேரத்தில், தீபிகா அதிகமாக கைப்பேசியை பாா்த்துள்ளாா். இதை அவரது தந்தை பாலமுருகன் கண்டித்தாா். இதனால் மனவேதனை அடைந்த தீபிகா வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். உடனே அக்கம்பக்கத்தினா்,அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற பாலமுருகன், உயிருக்குப் போராடி வரும் தனது மகளை பாா்த்து மனவேதனையில் இருந்தாா். வீட்டுக்கு வந்த அவா் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த யா. ஒத்தக்கடை போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.