மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயிலில் அடிபட்டு வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சோழவந்தான் அருகேயுள்ள ஆலங்கட்டாரம் கிராமத்தைச் சோ்ந்த சீனித்தேவா் மகன் இளங்கோவன் (47). இவா் சோழவந்தானில் உள்ள தினசரி காயகறிச் சந்தையில் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தினசரி காய்கறிச் சந்தைக்கு வந்தாா்.
அங்குள்ள ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரயிலில் அடிபட்டாா். இதில், பலத்த காயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








