/

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 4:03 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கோபிகிருஷ்ணன் (55). இவா் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் கோபிகிருஷ்ணன் வீட்டருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்ற போது சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற சிலம்பு விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.