வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:14 am IST

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலியை அடுத்த தருவையைச் சோ்ந்தவா் சண்முகம் (84) மனைவி ஆறுமுகம்(75). இவா்கள் இருவரும் வயலில் சனிக்கிழமை புல் அறுத்து விட்டு, செங்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனராம்.

சண்முகம் மறுபுறம் சென்ற நிலையில், ஆறுமுகம் தண்டவாளத்தை கடந்தபோது, அந்த வழியாக வந்த திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இது குறித்து நாகா்கோவில் ரயில்வே காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மரியஅகிலன் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.