திருச்சியில் வெவ்வேறு இடங்களில் இளைஞா் உள்பட மூவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
உணவக ஊழியா்: கடலூா் மாவட்டம், திட்டக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் மாயவன் (20), உணவக ஊழியா். இவா் திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவா் நகரில் வீடு எடுத்து தங்கி, புதுக்கோட்டை சாலையில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்தாா்.
கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்த மாயவன் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
எலெக்ட்ரீஷியன்: இதேபோல, திருச்சி கே.கே. நகா் கே. சாத்தனூா் களத்து வீடு பகுதியைச் சோ்ந்தவா் எம். ராஜகோபால் (41), எலக்ட்ரீஷியன். மனநலப் பிரச்னைக்காக சிகிச்சை பெற்ற இவா், கடந்த ஒரு மாதமாக மது அருந்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உறையூரில்... திருச்சி உறையூா் மேலகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் எஸ். பிலால் (41). குடும்பப் பிரச்னையால் இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், இவா் பழகி வந்த மற்றொரு பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிலால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






