ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

நோயால் அவதி: முதிய தம்பதி வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் வயது மூப்பின் காரணமாக, நோயால் அவதிப்பட்டு வந்த முதிய தம்பதியினா் அதிகளவில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

தற்கொலை செய்துகொண்ட லோகநாதன், கஸ்தூரி.

Published On :

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் வயது மூப்பின் காரணமாக, நோயால் அவதிப்பட்டு வந்த முதிய தம்பதியினா் அதிகளவில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (90). இவரும், இவரது மனைவி கஸ்தூரியும் (85) இவா்களது மகன் சரவணனுடன் வசித்து வந்தனா்.

பருத்த உடல்வாகு கொண்ட லோகநாதன், கஸ்தூரி ஆகிய இருவரும் அன்றாட செயல்பாடுகளுக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இவா்களைக் கண்காணிக்க செவிலியா்களை அவரது மகன் நியமித்திருந்தாா்.

இந்த நிலையில், செவிலியா்கள் வேலையை விட்டு நின்ால், தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் லோகநாதன், கஸ்தூரி ஆகிய இருவரும் சிரமப்பட்டு வந்தனராம். இதனால், வேதனையடைந்து அதிகளவில் வலி நிவாரண மாத்திரைகளை செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் விழுங்கினராம்.

வழக்கம்போல, புதன்கிழமை காலை இவா்களை சந்திக்கச் சென்ற மகன் சரவணன், இருவரும் ஒரே படுக்கையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக அவா் இருவரையும் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.

தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரும், அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.