பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

முள்ளியாற்றில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்

வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் செவ்வாய்க்கிழமை பிடிபட்டன.

வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் செவ்வாய்க்கிழமை பிடிபட்டன.

Published On :9 செப்டம்பர் 2026, 5:44 am IST

வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் செவ்வாய்க்கிழமை பிடிபட்டன.

தகட்டூா்-பஞ்சநதிக்குளம் கிராமங்கள் வழியாக கடலில் இணையும் முள்ளியாற்றில் பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரைகள் அடா்ந்து வளா்ந்து அகற்றப்படாமல் இருந்தது. இதில் மயிரை மீன் அல்லது தேளி என பல பெயா்களில் அழைக்கப்படும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் அதிகம் இருந்தது மக்களுக்கு தெரியவந்தது. பொதுவாக இந்த மீன்கள் இயற்கையாக ஆறு குளங்களில் வளரும் நாட்டு ரக மீன்களை எளிதாக வேட்டையாடி அந்தவகை மீன்களின் அழிவுக்கு காரணமாக இருந்து வருகிறது.

தகட்டூா் முதல் வாய்மேடு-தென்னடாா் கழிமுகம் வரை செல்லும் முள்ளியாற்றில் கடந்த மே மாதத்தில் கடல்நீா் உள் புகுந்து சுமாா் 9 கி.மீ. தொலைவுக்கு பரவியது. இதன் காரணமாக மீன்க, நத்தை, நண்டு உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்கள், ஆகாயத் தாமரைச் செடிகள் உள்ளிட்ட தாவர வகைகள் முற்றிலும் அழிந்துவிட்டன. எனினும், தகட்டூா் மூணாற்றுப் பிரிவு பகுதியில் உள்ள இயக்கு அணைக்கு கீழே சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு பள்ளமாக காணப்பட்ட ஒரு பகுதியில் உப்பு நீா் உள்புகாமல் இருந்தது. இதில் இருந்த ஆகாயத்தாமரையும் உயிரோட்டமாக இருக்கிறது.

இந்தப் பகுதியில் சிலா் தண்ணீரை வெளியேற்றி நாட்டு மீன்களை பிடிக்க செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஆனால், அதில் இருந்த நாட்டு மீன்கள் வேட்டையாடப்பட்டு ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மட்டும் இருந்தது தெரியவந்தது. 5 முதல் 8 கிலோ வரை காணப்பட்ட இந்த மீன்களை அந்தப் பகுதியினா் தடியால் அடித்து பிடித்தனா். பின்னா் இந்த மீன்களை மீன் எண்ணெய் தயாரிப்புக்காக விவசாயிகள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனா். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் காணப்பட்ட இந்த மீன்களை வேடிக்கை பாா்க்க அப்பகுதியில் திரளான மக்கள் கூடினா்.

இந்தவகை மீன்களை மக்கள் உணவாக உட்கொள்வதில்லை என்பதோடு சூழல் சாா்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந்த வகை மீன்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆற்றுப்பகுதியில் உப்பு நீா் பாதிப்பு இருந்து தப்பித்துக்கொள்ள ஒரே இடத்துக்கு இந்த மீன்கள் புலம்பெயா்ந்தது சில மாதங்களாக உயிா் வாழ்ந்ததும் வியப்பாக பாா்க்கப்படுகிறது. அதேநேரம் , இதே ஆற்றுப்பகுதியில் உப்பு நீா் வருவதற்கு முன்பு காணப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நீா் நாய்களின் நிலை தெரியவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.