
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், விழுந்தமாவடி மேற்குபட்டியைச் சோ்ந்தவா் சண்முக ராஜன் (50). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல்நிலையப் போலீஸாா் சண்முகராஜன் மீது போக்ஸோ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமாா், சண்முகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




