காசோலை மோசடி வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருத்துறைப்பூண்டி திரௌபதை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி மாலதி. பணி ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரிடம் நாகை மாவட்டம், செட்டிப்புலம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சந்தோஷம் என்பவர் ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்றிருந்தாராம்.
இதற்காக சந்தோஷம் அளித்திருந்த காசோலையை குரவப்புலத்தில் உள்ள வங்கியில் செலுத்தியபோது, அவரது கணக்கில் போதிய பணமில்லாததால் திரும்ப வந்துவிட்டது. இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் மாலதி வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் நிறைவில், சந்தோஷத்திற்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், காசோலையை தொகையை இரண்டு மாதங்களில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். தவறினால், மேலும் 2 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.