தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்காவிட்டால் அபராதம்! - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு!

டி20 உலகக் கோப்பையை வென்று சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Ishan kishan

இஷான் கிஷன் - படம் | AP

Published On :10 மார்ச் 2026, 4:04 pm IST

டி20 உலகக் கோப்பையை வென்று சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 8) நிறைவடைந்தது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சொந்த ஊருக்கு வந்தடைந்த இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இஷான் கிஷன் அணியில் இடம்பெறுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உள்ளூர் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரை இடம்பெறச் செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடிய இஷன் கிஷன் 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அந்தப் போட்டியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டிருக்கும். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் அரைசதம் விளாசி அசத்தினார்.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று பாட்னா திரும்பிய இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷன் பேசியதாவது: டி20 உலகக் கோப்பையை வென்றது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. உலகக் கோப்பையை வென்றது இந்திய அணிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் இந்திய அணியின் வெற்றி தொடரும் என நம்புகிறேன். நான் நன்றாக விளையாடினால், அது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்பினேன். நான் எப்போதும் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என முயற்சி செய்கிறேன் என்றார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Ishan Kishan was given a rousing welcome upon returning to his hometown after winning the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.