மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சொந்த மண்ணில் இலங்கை அணி வெற்றியுடன் உலகக் கோப்பையை தொடங்குமா?

சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் இலங்கை அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்பது குறித்து...

sri lankan players

இலங்கை அணி வீரர்கள் - படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் இலங்கை அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் இலங்கை அணி முழுமையாக இழந்தது.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் டி20 தொடரை முழுமையாக இழந்தது அந்த அணியின் தன்னம்பிக்கையை சற்று பாதித்திருக்கும். இந்த சூழலில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி அதன் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. அந்த அணியின் தன்னம்பிக்கை அதிகரிக்க முதல் போட்டியில் கண்டிப்பாக அயர்லாந்தை வீழ்த்தியாக வேண்டும். இலங்கை அணியில் வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடாததே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஓரளவுக்கு நன்றாக விளையாடுகிறார்கள். டாப் ஆர்டரில் பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் நன்றாக விளையாடுகிறார்கள். மிடில் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும். இக்கட்டான நேரங்களில் மூத்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும்.

இலங்கை அணி அதன் முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது. அண்மையில் அயர்லாந்து அணி நன்றாக விளையாடி டி20 போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. பால் ஸ்டிரிலிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டார் மற்றும் ஜோஷ் லிட்டில் போன்ற முக்கியமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அயர்லாந்து அணி, அதன் பின் 8 முறை டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ளது. ஒவ்வொரு டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் விளையாடும் அயர்லாந்து அணி, தன்னை கடும் போட்டியாளராக மாற்றிக் கொண்டுள்ளது. அண்மையில் இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 தொடர்களை வென்ற தன்னம்பிக்கையுடன் அயர்லாந்து அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது.

Summary

Regarding whether the Sri Lankan team, playing the T20 World Cup series on home soil, will start the tournament with a win...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.