அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!
படம் | AP

அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட்டான நிலையில், இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார்.
Published on

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட்டான நிலையில், இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.

அபிஷேக் மீண்டும் டக் அவுட்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, இன்றையப் போட்டியிலும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இருப்பினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அவர் 27 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன், 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து சைம் ஆயுப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

Summary

Ishan Kishan threatened in action after Abhishek Sharma was out for a duck in the T20 World Cup match against Pakistan.

அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!
இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com