பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
பெங்களூர் என்.எஸ். பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (33). இவரது தாயார் ஜெபமாலைமேரி (58). மனைவி குழந்தைதெரசா (29), குழந்தைகள் பிரான்சினா (5), ஜோனா (7 மாதம்). குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்காக இவர்கள் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டிருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிளரியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் வெட்டாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கார் ஓட்டுநர் பெங்களூரைச் சேர்ந்த தொப்ளான் மகன் சுப்பிரமணியன் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ஜோசப், குழந்தைத்தெரசா உள்ளிட்ட 5 பேரும் பலத்தக் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
