கல்லறைத் திருநாள்: முன்னோர்கள் சமாதிகளில் கிறிஸ்தவர்கள் வழிபாடு

திருத்துறைப்பூண்டியில் கல்லறைத் திருநாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் கல்லறையில் வழிபாடு நடத்தினர்.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டியில் கல்லறைத் திருநாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் கல்லறையில் வழிபாடு நடத்தினர்.
கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. காலமான முன்னோர்கள் நினைவாக இத்தினத்தில், அவர்களது கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு நடத்துவர்.
அதன்படி,  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி, மடப்புரம், பள்ளங்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் கல்லறைகளுக்கு வியாழக்கிழமை (நவ.2) சென்று, கல்லறைகளை மலர்களால் அலங்கரித்தும், முன்னோர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை படையலிட்டும் அஞ்சலி செலுத்தினர்.
 பின்னர், பங்கு தந்தை ஜான்பிரிட்டோ திருப்பலிகள் நிறைவேற்றி, பிரார்த்தனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com