மூவாநல்லூரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தல்

மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மூவாநல்லூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி சனிக்கிழமை (நவ.4) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
Updated on
1 min read

மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மூவாநல்லூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி சனிக்கிழமை (நவ.4) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
மூவாநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 1500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேலத்தெரு, கீழத்தெரு என இரண்டு இடங்களில் தலா ஒரு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளன.
இதில், மேலத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்ததையடுத்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு, மூவாநல்லூர் ஊராட்சி அலுவலக நிர்வாகத்தினர், மின் மோட்டாரை சரி செய்வதற்காக எடுத்துச் சென்றனர். பின்னர், மீண்டும் அதை பொருத்தவில்லை. இதனால், மேல்தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 350 குடும்பத்தினர், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகத்திலும், மன்னார்குடி ஒன்றிய அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அடுத்தடுத்து மனுக்கள் அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பழுதடைந்த மின் மோட்டரை சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய மின் மோட்டர் பொருத்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வலியுறுத்தி,  என். பாலசுப்பிரமணியன் தலைமையில், சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும் இதில் தீர்வு கிடைக்கவில்லையெனில் காலிக்குடங்களுடன் பெண்களை திரட்டி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com