திராவிடர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் 22-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை திராவிடர்கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலர் மு.ராமதாசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.க. மாநில பொதுச் செயலர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் சு.சிங்காரவேலு ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மாவட்டத் தலைவர்கள் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், இரா.கோபால், மாவட்டச் செயலர் பெ.வீரையன், மாநில பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி அமைப்பாளர் பி.ரமேஷ், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் வை.கௌதமன், ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, பாமணியில் உள்ள ஆர்.பி.சாரங்கன் நினைவு இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.