எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உலமாக்கள் அடையாள அட்டை புதுப்பிக்க அக். 20-இல் சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள உலமாக்கள் அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள அக். 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:59 pm

DIN

திருவாரூர் மாவட்டத்திலுள்ள உலமாக்கள் அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள அக். 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணியாற்றுவோர் அரசு நலத் திட்ட உதவிகள் பெற உலமா அடையாள அட்டை அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன்மூலம் பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணியாற்றும் 18 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர்கள் அடையாள அட்டை பெற ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடு செய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
உறுப்பினர்களின் பதிவு 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு  அக். 20-ஆம் தேதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இந்த வாரியத்தில் புதுப்பிக்கத் தவறிய உலமாக்கள் தங்களது உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.