எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை அளித்து அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.
மேலும், தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் கப்பலை தாக்கி அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன்காரணமாக அமெரிக்கா பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி அளித்தும் தனியார் சரக்கு கப்பல் நிறுவனங்கள் ஹோர்முஸ் வழியாக கப்பல்களை இயக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றினார்.
அப்போது எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பள்ளிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
வங்கியைத் தவிர அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 4 நாள்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary
Gas shortage! Schools and colleges closed for 2 weeks in Pakistan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

கேஸ் தட்டுப்பாடு: நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை உயர்வு!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திருவள்ளூரில் மண் அடுப்பு தயாா் செய்யும் தொழில் தீவிரம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரம்: எதிா்க்கட்சிகள் அமளியால் மக்களவை தொடா் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


