மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பள்ளி பரிமாற்றத் திட்ட தொடக்க விழா

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:04 am

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்கு வருகை தந்த எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை சிறப்பு விருந்தினர்களுடன் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். விழாவில் பள்ளி தலைமையாசிரியர் எம்.எஸ். பாலு தலைமை உரையாற்றினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ். சூசைரெத்தினம் பேசியது:  வெவ்வேறு மாணவர்கள் ஒன்று கூடி பழகுவதன் மூலம் அறிவு, சமூகப் பண்புகள் வளர்கிறது. மேலும், பள்ளி ஆய்வகம், நூலகம்,  புதிய கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ள பள்ளி பரிமாற்றத் திட்டம் பயன்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர் எம். அப்துல்மாலிக் தொடங்கி வைத்து, கற்றலின் புதிய வழிமுறைகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
இதில் தமிழாசிரியை கே. மதுராந்தகி, உடற்கல்வி ஆசிரியர் எஸ். ஆனந்தகுமார், எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் லெ. பிருந்தாதேவி, பு. பத்மாதேவி உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை ஓவிய ஆசிரியர் கே. நேரு தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் கே. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை கே. நளினி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.