ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவாரூரில் மின்சார வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், இந்த கோரிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
மத்திய அமைப்பின் கிளைத் தலைவர் ஆர். ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் டி. கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், கிளைச் செயலர் வி. சுப்ரமணியன், நிர்வாகிகள் கே. ராஜேந்திரன், ஆர். கண்ணன், ரமணி, வினோத் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


