தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வரதட்சிணை கொடுமை: இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து

Updated On :19 ஏப்ரல் 2018, 1:35 am IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரவாக்கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவருக்கும் பைங்காட்டூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ரேணுகாவுக்கும் (25) மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. அருள்ராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரேணுகா மகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ரேணுகாவிடம் ரூ.7 லட்சம் வரதட்சிணைக் கேட்டு அவரது கணவர் அருள்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேணுகா, செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ரேணுகாவின் தந்தை பாலகிருஷ்ணன் போலீஸில் அளித்த புகாரில், 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசையுடன் மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், மேலும் ரூ.7 லட்சம் வரதட்சிணைக் கேட்டு அவரை அவரது கணவன் வீட்டார் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 இதனிடையே, உடல் கூறாய்வு முடிந்ததும், ரேணுகாவின் சடலத்தை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி, அரசு மருத்துவமனை முன்பு பைங்காட்டூர் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேவேளையில், அவரது சடலத்தை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, கணவன் வீட்டாரும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நிகழ்விடத்துக்கு வந்த மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், காவல் ஆய்வாளர் மணிவேல் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து, ரேணுகாவின் சடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதற்காக பைங்காட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.