கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

திருவாரூரில் புதன்கிழமை நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டது. 
Published on
Updated on
1 min read

திருவாரூரில் புதன்கிழமை நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டது. 
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தில் கல்லூரி முதல்வர் மீனாட்சி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆயூர்வேதா மருத்துவர் வெங்கடேசன், கல்லூரி துணை முதல்வர் இரா. அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர் சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ஆரூரான் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ. கலியபெருமாள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, வாரியத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மற்றும் சுதந்திர தின போட்டிகள் மற்றும் அப்துல் கலாம் நினைவு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
கச்சனம் வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளித் தாளாளர் கே. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாரதி பெண்கள் மேம்பாட்டு மையத் தலைவர் எம். நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி முதல்வர் கே. பொதுச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள வெள்ளையனே வெளியேறு 50-ஆம் ஆண்டு பொன் விழா நினைவுத் தூண் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்று பகிர்வு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 
பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.பி. தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது: இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு தலைவர்களும், மக்களும் போராடியதன் விளைவாக, தற்போது நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். 
சுதந்திர இந்தியாவில் வாழும் நாம், நம்முடைய கடைமைகளையும், பொறுப்புகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். விழாவில், என்எஸ்எஸ் மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. 
இதில், பதிவாளர் எஸ். புவனேஸ்வரி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ. ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு தொடக்கப் பள்ளி...
குடவாசல் வட்டம், சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 72-ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாணவர்களிடையே திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 3-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி பத்மாசனம், வஜ்ராசனம், விருட்சாசனம், தனுராசனம் உள்ளிட்ட 10 யோகாசனங்களை செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை இந்திரா, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஜி. கோவிந்தராஜன், துணைத் தலைவர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.