ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

வலங்கைமானில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில், அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில், அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம், ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்பரை கிராமத்தில் நத்தம் வழியாகச் செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும், ஆதிச்சமங்கலம் வழியாக வேதாம்பரை செல்லும் சுள்ளான் ஆற்றின் சுற்றுப்பாலத்தை சீரமைத்திட வேண்டும் மற்றும் குடிமனைப்பட்டா இல்லாத குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சந்திரோதயம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் சுமதி, செயலாளர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.