திருவாரூர் பகுதியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த மையத்தின் 28-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் - தஞ்சை, விழுப்புரம் - திருவாரூர் ரயில் பயண வழித்தடத்தை நீட்டித்து பகல் நேரங்களில் ரயில்களை இயக்க வேண்டும், திருவாரூர் ரயில் நிலையத்தில் உள்ள 4 மற்றும் 5 ஆவது நடைமேடை பகுதி பணியை விரைந்து முடித்து, பயணிகள் நலன் கருதி சரக்கு ரயில் பெட்டிகளை இரவு நேரங்களில் மட்டும் இயக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியுள்ள புதிய பேருந்து நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், திருவாரூர் பகுதியில் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் உரிய பராமரிப்பு இன்றி தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதால், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் திருவாரூர் லயன்ஸ் அமைப்பும் இணைந்து இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கேரள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளித்து உதவுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மையப் பெருந்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற, கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் க. திருநாவுக்கரசு, சமரச மைய நிர்வாகிஅருள், பயிற்சி இயக்குநர் மா. சரவணன், பொதுச் செயலர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் உயா்நிலைக் குழு ஏமாற்று வேலை: அமைச்சா் வன்னி அரசு

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையாா் கோயிலில் உடல் பருமன் கொண்டவா்கள், வயதானவா்களுக்கு தடை

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


