
ஆதரவின்றி தவித்த மூதாட்டி முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டி மீட்கப்பட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டி மீட்கப்பட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாகன நிறுத்தம் அருகில் சில நாள்களாக மூதாட்டி ஒருவர் அவதிப்பட்டு வருகிறார், அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப்பில் (கட்செவி) தகவல் பரவியது. இத்தகவலையறிந்த, சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் கோவிந்தராஜ், மூதாட்டியின் நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் சமூக நல அலுவலர்கள், அந்த மூதாட்டியை மீட்டு அம்மையப்பனில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





