இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு 4 நாள்கள் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள 4 நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள 4 நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :
2019 -ஆம் ஆண்டு செப்டம்பர் 1 -ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்தப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதையொட்டி, செப். 1 -ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
செப். 1 -ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியானவர்கள். இதையொட்டி, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கு செப். 1-ஆம் தேதி முதல் அக். 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்காக செப். 9, செப். 23, அக். 7, அக். 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், விடுதல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்குச் சாவடி முகவர் நாள் ஒன்றுக்கு 10 விண்ணப்பங்கள் மட்டுமே அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி, தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் சொக்கநாதன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.