திருவாரூர் அருகே காணாமல் போன தேக்கு மரங்களின் துண்டுகள் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கஜா புயலின்போது திருவாரூர் மாவட்டத்தில், சுமார் 79 ஆயிரம் தேக்கு மரங்கள் சாய்ந்தன. இவைகளை சிறிது, சிறிதாக வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த தேக்கு மரங்கள் திருட்டுப் போவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், வனச்சரகர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் தேக்கு மரத்துண்டுகள் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அலுவலர்கள் அங்கு சென்று அந்தத் தேக்கு மரத்துண்டுகளைக் கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மத்திய பல்கலைக்கழகம் அருகே செல்லும் வெட்டாற்றின் கரைகளில் உள்ள தேக்கு மரத்துண்டுகள் அவை என கண்டறியப்பட்டது. கஜா புயலின்போது சாய்ந்த இந்த மரங்களை சிலர் இங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர் என்றும், 6 துண்டுகளின் மதிப்பு ரூ. 40 ஆயிரம் எனவும் கண்டறியப்பட்டது.
பொறுப்புகள் மாற்றம்:
இந்த விவகாரம் தொடர்பாக, செக்யூரிட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மத்தியப் பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், துணை பதிவாளர் வேலு வகித்த 5 கூடுதல் பதவிகளை வேறு நபர்களிடம் ஒப்படைத்தும் பதிவாளர் புவனேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


