மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உத்ஸவத்தின் 7-ஆம் நாள் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி டிச.8-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கியது. டிச.18-ஆம் தேதி நடைபெற்ற பரமபத வாசல் திறப்புக்கு பிறகு, இராப்பத்து உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதன் 7-ஆம் நாளான திங்கள்கிழமை ருக்மணி, சத்யபாமா சமேதராக உத்ஸவர் ராஜகோபால சுவாமி கல்யாணத் திருக்கோல அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் மன்னார்குடி வி. திருநாவுக்கரசு பிள்ளை மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







