விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அனைவருக்கும் நிவாரணம் கோரி சாலை மறியல்

மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:11 am IST

மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி அருகே உள்ள மண்ணுக்குமுண்டான் ஊராட்சிக்குள்பட்ட கர்ணாவூர் கிராமத்தில் இதுவரை புயல் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், கர்ணாவூர் பகுதியில் உடனடியாக புயல் நிவாரணம் வழங்கக் கோரியும், மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் ஊராட்சிக்குள்பட்ட வடகாடு பகுதியில் 479 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 402 குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரணப் பொருள்கள் வந்துள்ளன. மேலும், வங்கி கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தியதில் 15 பேருக்கு விடுப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் கஜா புயலுக்குப் பிறகு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 
இதைக் கண்டித்தும், அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கோவிலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி தலைமையில், கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வடகாடு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
 இந்த மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வழித்தடங்களில் சுமார்2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.