வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது.
திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மகா சிவாரத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
இதேபோல், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், நரிக்குடி எமனேசுவரர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில், பூவனூர் அங்காளப் பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் மகா சிவராத்திரி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.