போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பொதுமக்கள் எதிர்ப்பு;  எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்

திருவாரூர் அருகே எண்ணெய் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு

Updated On :8 ஜூன் 2018, 1:19 am IST

திருவாரூர் அருகே எண்ணெய் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து குழாய் பதிக்கும் பணி வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி, முக்குளத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இப்பணிகள் வெள்ளக்குடியில் தொடங்கி அடியக்கமங்கலம் வரை பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விளை நிலங்களில் பதிக்கப்படும் குழாய்களில் கசிவு ஏற்படும்போது விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, குழாய் பதிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதேபோல், முக்குளத்து பகுதியிலும் விளை நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, குழாய் பதிக்கும் பணிக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், வியாழக்கிழமை பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, குழாய் பதிக்கும் பணியை நிறுத்திய ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.