மன்னார்குடி அருகே அனுமதியின்றி வீட்டில் வைத்து, டாஸ்மாக் மதுபுட்டிகளை விற்பனை செய்த 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வடுவூரை அடுத்த எடமேலையூர், எடகீழையூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபுட்டிகளை வாங்கி வந்து, வீடுகளில் இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பதாக வடுவூர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து, போலீஸார் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் எடமேலையூர் தெற்குகண்டியன் தெரு தெ. ராமலிங்கம்(49) வீட்டிலிருந்து 10 மதுபுட்டிகளும், எடகீழையூர் தெற்குத்தெரு சா. அழகேசன் (43) வீட்டிலிருந்து 10 மதுபுட்டிகளும் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக, ராமலிங்கம், அழகேசன் ஆகியோரை வடுவூர் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து உயரும் முட்டை விலை! ஆம்லெட் பிரியர்கள் வருத்தம்!
சோனம் வாங்சுக் உடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை உண்ணாவிரதம்!

தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியான விவகாரம்!






