மாசி மகத்தை முன்னிட்டு குடவாசல் வட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
குடவாசல் வட்டம், எண்கண் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல், 108 திவ்ய தேசங்களில் 27-ஆவது தலமான திருக்கண்ணமங்கை பக்தவச்சலப்பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பக்தவச்சலப்பெருமாள்(உத்ஸவர்) கோயில் உள்பிராகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.