ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், கீழப்பெருமழை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் முப்பெரும் விழா, பெற்றோர் ஆசிரியர்

Updated On :29 மார்ச் 2018, 7:41 pm

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், கீழப்பெருமழை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் முப்பெரும் விழா, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் அ. சோமசுந்தரம்  தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியர் அ.செந்தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நா. சொக்கலிங்கம், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வெ. சுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ப. கருணாமூர்த்தி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
இவ்விழாவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் இரா. முருகேசன்,    பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் நாகவள்ளி, கல்விக்குழுத் தலைவர் க. பூமிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் வே. மணவழகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் வி. ஸ்ரீதர், ச. சுப்பிரமணியன், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர் சி. ராம்பிராஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் பொ. முருகையன் வரவேற்றார். ப. வேதரெத்தினம்  நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.