காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஆசாத், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
டெல்டா மாவட்டங்களில் 51 லட்சம் விவசாயக் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காலம் தாழ்த்திய மத்திய அரசை கண்டிப்பது, கார்ப்பரேட் நலன்களுக்காகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகிய கனிம வளங்களை எடுக்கும் முயற்சிகளுக்காகவும் துணைப் போகும் மத்திய அரசை கண்டித்து, மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

