ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து: வீடுகளில் கருப்புக்கொடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திருவாரூர் அருகேயுள்ள கூடூரில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி

Updated On :29 மார்ச் 2018, 7:46 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திருவாரூர் அருகேயுள்ள கூடூரில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றம் காவிரி வழக்கில் வழங்கிய தீர்ப்பில், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த ஆறு வார காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்துவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அந்த வகையில், திருவாரூர்அருகேயுள்ள கூடூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்தவித முயற்சியும் எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும்,  உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் கடைகள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறியது: தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.