கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் அரசு அலுவலர்களை மிரட்டி முறைகேட்டில் ஈடுபட்டு குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர் என மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட பகுதியில் கூட்டுறவு சங்க இயக்குநர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போதும், மனு பரிசீலனையின்போதும், அதிமுகவிர் அராஜகத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளை குழிதோண்டி புதைத்து வருகின்றனர்.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் இப்போதுள்ள சூழ்நிலையில், ஆளும் கட்சியினர் வெற்றி பெற முடியாது என்பதால் அதிகாரதுஷ் பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை மிரட்டி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு அதன்மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர்.
மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட குறிப்பாக, கீழநத்தம், ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை, மூவர்கோட்டை ஆகிய இடங்களில் அதிமுகவினரால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மிரட்டப்பட்டு அவர்களை தவறான செயல்களில் ஈடுபட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இச்சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் அது எந்த விதத்திலும் நியாயமானதாக இருக்காது. இருப்பினும், திமுகவினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விழிப்புடன் இருந்து தேர்தல் விதிமுறைகளை அலுவலர்கள் மீறாமல் இருக்க அறவழியில் நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தேர்தல் முறைகேடு குறித்தும், அதற்கான ஆதாரங்களை எனக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறேன்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, கூட்டுறவு சங்க தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அனைத்து தகவல் மற்றும் ஆதாரங்கள் திமுக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவு

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

