திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி, புதன்கிழமை அலுவலர்களை அறையில் வைத்துப் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சங்கத்தில் இயக்குநர் பதவிக்கு திங்கள்கிழமை அதிமுகவினர் 11 பேர், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேர் மற்றும் மூவர் என மொத்தம் 25 பேர், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநரும், தேர்தல் அலுவலருமான கலைச்செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை காலை திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், வேளுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பார்த்தபோது, முதல் நாள் ஒட்டப்பட்ட 22 பேரில், அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய பட்டியல் மட்டுமே ஒட்டப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அனைவரும் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து வங்கியின் செயலர் என். ரவி கூறியது:
அதிமுக 11 பேர், திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேர் மற்றும் மூவர் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இயக்குநர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி போக, 22 பேர் கொண்ட பட்டியல் சுவரில் ஒட்டப்பட்டது. புதன்கிழமை காலை வங்கியில் வந்து பார்த்தபோது, ஒட்டப்பட்ட இரண்டு பட்டியலும் இல்லை. புதிதாக, ஒரு பட்டியல்தான் இருந்தது.
வங்கியின் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். அப்போது, என்னையும், அலுவலகப் பெண் உதவியாளரையும் உள்ளே வைத்து வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டனர். இதுபற்றி கூத்தாநல்லூர் போலீஸில் புகார் தெரிவித்தேன்.
காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் வந்த பிறகு, வங்கியின் கதவு திறக்கப்பட்டது. இதுகுறித்து பதிவாளரிடம் தெரிவித்துள்ளேன் என்றார் அவர்.
வேளுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் முன்பு ஆண்கள், பெண்கள் என திரளானோர் மாலை வரை திரண்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

